ADDED : மார் 14, 2025 11:46 PM

செய்முறை
முதலில் வெண்டைக்காயை, வாணலியில் போட்டு வழுவழுப்பு போகும் வரை எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும். தேவை என்றால் சிறிதளவு புளிச்சாறு தெளித்து வறுக்கலாம். வெண்டைக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், சிறிதாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும். இந்த கலவையில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் துாள், தனியா துாள், கரம் மசாலா, மிளகாய் துாள், மிக்சியில் அரைத்து வைத்த தக்காளியை போட்டு கலக்கவும். மூடியை போட்டு வைக்கவும்.
எண்ணெயில் இருந்து, மசாலா தனியாக பிரியும் வரை, வேக விடவும். அதன்பின் தயிர், உப்பு, வறுத்து வைத்துள்ள வெண்டைக்காயை போட்டு கிளறி மூடவும். நடு நடுவே அடி பிடிக்காமல் கிளற வேண்டும். வெண்டைக்காய் வெந்ததும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை துாவினால், பஞ்சாப் ஸ்டைல் டேஸ்டி வெண்டைக்காய் மசாலா ரெடி.
சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். அற்புதமான சுவையுடன் இருக்கும். வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள். குடும்பத்தினர் அவ்வப்போது செய்து தரும்படி நச்சரிப்பர்.