
மாலை நேரம் காபி அல்லது டீ அருந்தும்போது, நாக்கு நொறுக்கு தீனியை தேடும். கடைக்கு சென்று தின்பண்டம் வாங்கி வர, சோம்பலாக இருக்கும். கவலையே வேண்டாம். வீட்டிலேயே சுவையான ஆலு, கேபேஜ் டிக்கா செய்யலாம்.
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கு, காலி பிளவர், நறுக்கிய முட்டைகோசை நன்றாக கழுவி, பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் உறித்து மசித்துக் கொள்ளவும். இதனுடன் காலி பிளவர், முட்டைகோஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையில் மஞ்சள் துாள், உப்பு, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கடலை மாவு சோம்பு சேர்த்து நன்றாக பிசையுங்கள். இதை சிறு, சிறு உருண்டைகளாக்கி, கட்லெட் போன்று தட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் கட்லெட்களை சோளமாவில் இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்து, எண்ணெயில் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கேபேஜ் டிக்கா தயார். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் பொருத்தமாக இருக்கும்
- நமது நிருபர் -.