ADDED : செப் 20, 2025 04:47 AM

சேப்பங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்னையை தீர்ப்பதுடன், இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது, ரத்த ஓட்டத்தை சீராக்குவது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, புற்றுநோய் அபாயத்தை குறைப்பது உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது.
வீடுகளில் சேப்பங்கிழங்கில் கூட்டு செய்வர்; கார குழம்பு வைப்பர். சேப்பங்கிழங்கை வைத்து ஆந்திரா ஸ்டைலில் சூப்பரான ரோஸ்ட் செய்யலாம்.
செய்முறை அடுப்பை ஆன் செய்து குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சேப்பங்கிழங்கை போட்டு உப்பு போட்டு, குக்கரை மூடி வைக்கவும், ஒரு விசில் அடித்ததும் அடுப்பை ஆப் செய்து சேப்பங்கிழங்கை எடுத்து தோலை உரித்து, வட்ட வடிவில் நறுக்கி வைக்கவும்.
மீண்டும் அடுப்பை ஆன் செய்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் கிழங்குடன் சேர்த்து மிளகாய் பவுடர் சேர்த்து நன்றாக கிளறி, இறுதியாக அரிசி மாவு துாவி நன்றாக கிளறி இறக்கினால், ஆந்திரா ஸ்டைலில் காரமான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார்.
ஒரு தடவை செய்து சாப்பிட்டால் நாவில் நடமாடும் இதன் சுவை, அடிக்கடி செய்து சாப்பிட தோன்றும். தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ சேப்பங்கிழங்கு
ஒரு டீஸ்பூன் மிளகாய் பவுடர்
நான்கு காய்ந்த மிளகாய்
ஏழு பல் பூண்டு
ஒரு கொத்து கறிவேப்பிலை
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒரு டீஸ்பூன் அரிசி மாவு
கால் டீஸ்பூன் பெருங்காய பவுடர்
கால் டீஸ்பூன் மஞ்சள் பவுடர்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
- நமது நிருபர் -