
அசைவ உணவு பிரியர்கள் மட்டன், சிக்கன் சுக்காக்களை அதிகம் விரும்பி சாப்பிட்டு இருப்பர். ஆனால், சைவ உணவு பிரியர்கள் சுக்காக்களை சாப்பிட்டு இருக்க மாட்டார்கள். அவர்களுக்காகவே சேனை கிழங்கில் சுக்கா செய்யலாம்.
செய்முறை:
சேனைக்கிழங்கை நன்கு தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளியையும் நறுக்கி தயார் நிலையில் வைத்து கொள்ளவும். மசாலா பொருட்களையும் எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள், மசாலா பொருட்களை சேர்த்து, மஞ்சள் பவுடர் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்திருக்கும் சேனைக்கிழங்கு துண்டுகளை போட்டு, நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
மசாலா விழுதை சேர்த்து நன்கு கிளரவும். தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்தவுடன் நறுக்கிய மல்லி இலையை துாவி இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் சூடான, காரமான சேனை சுக்கா தயார்.
மசாலா விழுதை சேர்த்து நன்கு கிளரவும். தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்தவுடன் நறுக்கிய மல்லி இலையை துாவி இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் சூடான, காரமான சேனை சுக்கா தயார்
- நமது நிருபர் -.