
வாழைப்பழம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய பழமாகும். இது பொட்டாசியம், வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
'வாழைப்பழ கட்லெட்' செய்யவதை தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை
பச்சை வாழைப்பழங்களை நன்றாக கழுவி, இரு புறத்தின் ஓரங்களை நீக்கவும். தோலுடன் மென்மையாகும் வரை குக்கரில் வேக வைக்கவும். உங்களுக்கு தேவைக்கேற்ப ஒரு விசில் அல்லது இரண்டு விசில் வைத்து கொள்ளுங்கள். அதன்பின் வாழைப்பழங்களின் தோலை உரித்துவிடவும். ஸ்பூனால், வாழைப்பழங்களை நன்றாக பிசையவும்
ஒவ்வொன்றாக அனைத்து மசாலா பொருட்கள், மூலிகைகள், அரிசி மாவு, ரவை, ஆளி விதை பொடி, உப்பு சேர்த்து, அனைத்தையும் சப்பாத்திக்கு மாவு பிசைவது போன்று, நன்றாக கலந்து, நமக்கு தேவையான சைசில் தனித்தனியாக வெட்டி எடுத்து கொள்ளவும்
ஒவ்வொன்றிலும் மூன்று உலர்ந்த திராட்சை பழங்களை சேர்த்து, நன்றாக மூடவும்
சூடான வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் தடவி, இரண்டு பக்கங்களிலும் வறுத்து, உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்
இந்த கட்லெட்டுடன் வேர்க்கடலை சட்னி, புதினா சட்னி, புளி, இனிப்பு சட்னியுடன் இணைத்து சாப்பிடலாம்.
- நமது நிருபர் -

