ADDED : மே 02, 2025 09:12 PM

எப்போதும் சப்பாத்தி சாப்பிட்டு போர் அடிக்கிறதா. வாய்க்கு சுவையான, உடலுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டி சாப்பிட விருப்பமா. வாழைக்காய் மசாலா பரோட்டா ட்ரை செய்யுங்கள்.
செய்முறை
முதலில் வாழைக்காயை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரை வேக வையுங்கள். வெந்த பின் தோலை நீக்கி விட்டு மசித்து வைக்கவும்.
அதன்பின் இந்த கலவையில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை, மஞ்சள் துாள், மிளகாய் துாள், உப்பு போட்டு நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். அரை மணி நேரம் மூடி வையுங்கள்.
அதன்பின் சிறு சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி தட்டி கொள்ளவும். தோசைக்கல்லை வைத்து சூடானதும் அதில் தட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்கவும். தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம். மாறுபட்ட சுவையுடன் இருக்கும். செய்வதும் எளிது.
- நமது நிருபர் -

