தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ சமையல் மணக்க டிப்ஸ்

 சமையல் மணக்க டிப்ஸ்

 சமையல் மணக்க டிப்ஸ்


ADDED : ஜூலை 11, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தோசை மாவுக்கு அரிசி, உளுந்துடன் சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் தோசை மொறுமொறுப்பாக வரும்.

l கேரட் சூப் செய்யும் போது, சிறிதளவு வறுத்த சேமியா சேர்த்தால் சூப் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.

l சாம்பார் செய்ய துவரம் பருப்பு வேக வைக்கும் போது, அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்தால் பருப்பு விரைவாக வேகும். மணமும், சுவையும் அதிகரிக்கும்.

l கறிவேப்பிலை துவையல் செய்யும் போது, உளுத்தம் பருப்பு தாளிப்புக்கு பதிலாக, வேர்கடலையை வறுத்து சற்றே பொடித்து சேர்த்தால் துவையல் மணமும், சுவையும் நன்றாக இருக்கும்.

l மீதமான கீரை அல்லது முட்டைகோஸ் பொரியலை வீணாக்காமல், அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து, பக்கோடாவாக பொரித்தால் சுவையான மாலை நேர சிற்றுண்டி ரெடி.

l குக்கரில் கருணை கிழங்கை வேக வைத்து, மசால் வடை மாவுடன் சேர்த்து, வடை சுட்டால் சுவை வித்தியாசமாக இருக்கும்.

l இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் போது, சிறிது வடித்த சாதம் சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சு போல மென்மையாக வரும்.

l ரவையை வறுக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்து வறுத்து சேமித்து வைத்தால், நீண்ட நாட்கள் புழுக்கள் வராமல் பாதுகாக்கலாம்.

l சமையலில் தாளிப்பு செய்யும் போது, கடுகு சேர்த்தவுடன், ஒரு சிட்டிகை மஞ்சள் துாள் சேர்த்தால், கடுகு வெடிக்கும் போது மேலே சிதறாமல் இருக்கும்.

l பால்கோவா செய்யும்போது மெலிதான துணியில் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை போட்டு, இறுக கட்டி கொதிக்கும் பாலில் வைத்தால், பால்கோவா கிரீம் நிறத்தில் வரும்.

l அடை மாவில் ஒரு கப் கேரட் துருவலை கலந்து செய்தால், சுவையும், மணமும் அதிகரித்து அடை ருசியாக இருக்கும்.

l முறுக்கு, தேன்குழல் செய்யும் போது, ஏலக்காய் விதைகளை சேர்த்து, மாவுடன் கலந்து செய்தால் மணமும், சுவையும் அதிகரிக்கும்.

l வாழைக்காய் பஜ்ஜி மாவில் சிறிதளவு இட்லி மாவு கலந்து செய்தால், பஜ்ஜி நன்கு உப்பி மென்மையாக வரும். சுவையை மேம்படுத்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us