ADDED : ஆக 15, 2026 12:58 AM

l சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்தால், சப்பாத்தி மென்மையாகவும், மெல்லியதாகவும் வரும்
l புளிக்கு பதிலாக தக்காளியை பிழிந்து கிடைக்கும் சாற்றை ரசம், குழம்பிற்கு பயன்படுத்தினால் வித்தியாசமாக சுவை கிடைக்கும்
l இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருந்தால், அதன் மீது சிறிதளவு சர்க்கரையை துாவினால் போதும். நன்கு புளித்து விடும்
l வடை, பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க மாவுடன் ஒரு டீஸ்பூன் ரவை சேருங்கள்
l மாங்காயை துருவி நான்கு காய வைத்து பொடியாக்கி சேமித்து வைத்தால், புளிப்பு சுவை தேவைப்படும் உணவுகளுக்கு பயன் படுத்தலாம்
l இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு கைப்பிடி கறுப்பு எள்ளை நன்றாக வறுத்து சேர்த்தால், இட்லி பொடி நல்ல மணமும் சுவையும் இருக்கும்
l வெந்தய குழம்பை தயார் செய்து இறக்கும் போது, ஒரு ஸ்பூன் எள்ளு பொடியை சேர்த்தால் குழம்பு வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்
l கேக் தயாரிக்கும் போது முந்திரி, பாதாமை பாலில் சிறிது நேரம் ஊறவைத்து பயன்படுத்தினால், கேக்கில் நன்கு கலந்து, சாப்பிடும்போது உதிராமல் இருக்கும்
l வெயில் காலத்தில் முட்டைகள் கெட்டு போகாமல் இருக்க, அவற்றை தண்ணீரில் போட்டு வைத்தால் 10 நாட்கள் வரை பாதுகாக்கலாம்
l இஞ்சி துவையல் செய்யும் போது உளுந்தம் பருப்பை சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்
l வெண்டைக்காய் கார குழம்பு செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சீரக துாள் சேர்த்தால் சுவை கூடும்
l இட்லி உப்புமா செய்யும் போது இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்
l ராகி புட்டு செய்யும் போது, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
l பாசுமதி அரிசியுடன் தேவையான அளவு ஏலக்காய் சேர்த்து, ரவை போல உடைத்து வைத்து கொண்டால், தேவையான போது விரைவில் பால் பாயாசம் செய்யலாம்.
