ADDED : அக் 25, 2025 05:07 AM

வெற்றிலை பூஜைக்கு பயன்படுத்தும் மங்கள பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. உணவுக்கு பின், வெற்றிலை மென்றால் சாப்பிட்டது எளிதில் ஜீரணமாகும். இதில் அருமையான ரசம் செய்யலாம். மழைக்காலம், குளிர்க்காலத்துக்கு ஏற்றதாகும்.
செய்முறை முதலில் வெற்றிலைகளை நன்றாக கழுவி, காம்புகளை அகற்றவும். சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்சியில் போடவும். இதில் கழுவிய துவரம் பருப்பு, நறுக்கிய தக்காளி, மஞ்சள்துாள் சேர்த்து தேவையான அளவு நீர் சேர்க்கவும். அனைத்தையும் நைசாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும். இதில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கலவையை போடவும். ஒரு கப் நீர் சேர்த்து, நன்றாக கலக்கவும்.
இரண்டு நிமிடங்களுக்கு பின், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இதில் வெல்லம், புளி கரைசல் சேர்க்கவும். அதன்பின் ரசப்பொடி போடவும்.
கொதித்து இறக்கும்போது, கொத்துமல்லி சேர்த்தால் வெற்றிலை ரசம் தயார்
- நமது நிருபர் - .

