ADDED : அக் 18, 2025 04:39 AM

தீபாவளி என்றாலே விதவிதமான பலகாரங்கள் தான் முதலில் நினைவில் வரும். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடைகள் உடுத்திய பின், இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம். இதையே கொஞ்சம் ஆரோக்கியமானதாக செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், பாரம்பரிய கருப்பு கவுனி அரிசியை கொண்டு செய்யலாம்.
செய்முறை கவுனி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
இதனுடன் எள், ஓமம், மிளகாய் துாள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த மாவு கலவையுடன் சிறிதளவு வெண்ணெய், சூடான தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தற்போது கருப்பு கவுனி முறுக்கு செய்வதற்கான மாவு ரெடியாகிவிட்டது.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கவுனி அரிசி முறுக்கு ரெடி.
கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளதால், ரத்த அளவை சீராக வைத்திருக்கும். இதயம் தொடர்பான எவ்வித உடல் நல பாதிப்புகளும் ஏற்படுவதை தடுக்க பேருதவியாக இருக்கும்.
- நமது நிருபர் -

