ADDED : ஆக 09, 2025 05:06 AM

இட்லி மீந்து விட்டால் கவலை வேண்டாம். இட்லி உப்புமா செய்வதற்கு பதிலாக, ஒரு முறை லெமன் இட்லி செய்து பாருங்கள். செய்வதற்கு நேரம் குறைவு. சுவையோ அதிகமாக இருக்கும்.
செய்முறை வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பின், கடுகு, உளுந்தம் பருப்பு, முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், சர்க்கரை, உப்பு சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு, மஞ்சள் துாள், லெமன் சாறு சேர்க்கவும்.
இதில், ஏற்கனவே உள்ள இட்லிகளை போட்டு, பதமாக வதக்கி எடுக்கவும். அவ்வளவு தான் லெமன் இட்லி தயார். இதில், கொத்தமல்லி தழை துாவி, சாப்பிட வேண்டியது தான்.
இதற்கு சட்னி தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம் சுவையாக இருக்கும். சுவை வித்தியாசமாக இருக்கும். புளிப்பு, காரத்துடன் இட்லியை சாப்பிடும் போது புதுவிதமான சுவையை சுவைக்கலாம். இந்த உணவை இட்லி மீந்துவிட்டால், மட்டுமல்ல வித்தியாசமான 'லஞ்ச் பாக்ஸ்' ரெசிபிக்கும் பயன்படுத்தலாம்.\
- நமது நிருபர் -

