ADDED : அக் 25, 2025 05:07 AM

இனிப்பு என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். விசேஷ நாட்களில் கண்டிப்பாக கேசரி, பாயசம், குலோப் ஜாமூன் முக்கியமாக இடம் பெற்றிருக்கும். இந்த வாரம் பிரெட்டில் குலோப் ஜாமூன் செய்து பார்க்கலாம்.
செய்முறை பிரெட்டுகளை சிறு சிறு துண்டுகளாக மிக்ஸியில் நைஸாக பவுடர் போன்று அரைத்துக் கொள்ளவும்.
இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி இதனுடன் பால் பவுடர் சேர்ந்து கலந்து கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிரெட் மற்றும் பால் பவுடர் கலவையுடன் சிறிதளவு நெய் சேர்த்து பிசையும் போது உருண்டை மென்மையாகவம், ருசியாகவும் இருக்கும். இதை குளோப் ஜாமூனுக்கு ஏற்றவாறு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, ஏலக்காய் பவுடர், குங்குமப்பூ கிடைத்தால் இதையும் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகுடன் சேர்த்து ஊற வைத்தால் போதும் சுவையான பிரட் குலோப் ஜாமூன் ரெடி
- நமது நிருபர் - .

