ADDED : மார் 22, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
♨ எலுமிச்சை இலையை எண்ணெயில் போட்டு வதக்கி, மிளகாய், புளி, உப்பு, உளுந்து, பெருங்காயம் சேர்த்து துவையல் செய்தால் சுவையாக இருக்கும்
♨ வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முன்பு, பச்சரிசியை லேசாக வறுத்துவிட்டு, அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின், பொங்கல் செய்தால் நல்ல ருசியாக இருக்கும்
♨ உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, சிப்ஸ் போன்று கிழங்கை சீவி, காய்ந்த மிளகாய், கொத்துமல்லி, பூண்டு, சீரகம், தேங்காய் அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்
♨ ரத்தசோகை குறைபாடு இருப்போர், பனங்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
♨ சமையலுக்கு கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்க்கும்போது அதிக நேரம் வதக்கக் கூடாது. பச்சையாக இருந்தால் தான் சத்துகள் முழுமையாக கிடைக்கும்.