ரவா தோசை செய்யும் போது, இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை மொறுமொறுவென வரும்.
லட்டு செய்யும் போது சீனிக்கு பதில் கற்கண்டு சேர்த்து செய்தால், பல நாட்கள் ஆனாலும் லட்டு உலர்ந்து போகாது.
முட்டையை வேக வைக்கும் போது ஓட்டில் விரிசல் ஏற்படாமல் இருக்க, தண்ணீரில் சில துளி வினிகர் சேர்க்க வேண்டும்.
பச்சை பட்டாணி வேக வைக்கும் போது, சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் பட்டாணியின் நிறம் மாறாது.
இறால் சமைக்கும் போது 10 முதல் 13 நிமிடங்கள் மட்டுமே வேக வைத்தால் தான் மென்மையாக, சுவையாக இருக்கும். 15 நிமிடத்திற்கு மேல் சென்றால் இறால் ரப்பர் போல ஆகிவிடும்.
உருளைக் கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது கடைசியில் சிறிதளவு ரஸ்க் சேர்த்தால் மொறுமொறுப்புடன் கூடிய சுவை கிடைக்கும்.
பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து அதை உணவு பொருட்களில் பயன்படுத்தினால் உடலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது

