ADDED : ஏப் 25, 2025 10:08 PM
தயிர் வடை செய்யும்போது, உளுந்தம் பருப்புடன் ஆறு முந்திரி பருப்பை ஊற வைத்து, அரைத்து செய்தால் வடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
அடை, பக்கோடா செய்யும்போது மல்லிதழை, புதினா, கறிவேப்பிலையை பொடிசாக நறுக்கி சேர்த்து பாருங்கள். மணமும், ருசியும், செரிமானமும் சீராக இருக்கும்.
சர்க்கரை பொங்கல் செய்யும்போது, அரை கப் தேங்காய் பால் ஊற்றி கிளறினால், அற்புத சுவையாக இருக்கும்.
அவல் உப்புமா செய்யும்போது பயத்தம் பருப்பை, பதமாக வேகவைத்து உப்புமாவுடன் சேர்த்தால், சுவையாக நன்றாக இருக்கும்.
முட்டை அடித்து ஆம்லெட் போடும்போது, சிறிது பால் கலந்து ஊற்றினால் ஆம்லெட் மிருதுவாக வரும்.
குழம்பு, பொரியல், குருமாவுக்கு தேங்காயை அரைத்து சேர்ப்பதற்கு பதில், கசகசாவை பொடியாக்கி சேர்த்தால் சுவையாக நன்றாக இருக்கும்.
வாழைக்காய் பொரியல் செய்யும்போது அதில் மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்து கொண்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். வாயு தொல்லை ஏற்படாது.
அதிரச மாவுடன் விதை இல்லாத பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து செய்தால் அதிரசம் சுவை நன்றாக இருக்கும்

