ADDED : மே 02, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- சாதம் குழைந்துவிட்டால் கவலைப்படாமல் அதை சாம்பார் சாதம், தயிர் சாதமாக மாற்றி பரிமாறலாம்.
- ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, 2 டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும், மணமாகவும் இருக்கும்.
- ஈயப்பாத்திரத்தில் ரசமும், மண்சட்டியில் வத்தல் குழம்பும், வெண்கல பாத்திரத்தில் அரிசி உப்புமாவும் செய்தால் தனி ருசியாக இருக்கும்.
- கொதிக்கும் சூப்பில் முட்டையை சேர்க்கும் போது, முட்டையை நேரடியாக சூப்பில் உடைத்து ஊற்றாமல், ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, கலக்கி வைத்து கொள்ளவும். அந்த கலவையை சூப்பில் ஊற்றும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
- தயிர் வடை செய்யும் போது, உளுந்தம் பருப்புடன் ஐந்து அல்லது ஆறு முந்திரி பருப்பையும் ஊற வைத்து அரைத்து செய்தால் வடை மிருதுவாக வரும்.
- தக்காளி சூப் செய்யும் போது, நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை, அதில் போட்டால் சூப் குடிப்பதற்கு அருமையாக இருக்கும்.
- மெதுவடைக்கு மாவு அரைக்கும் போது நீர் அதிகமாகி விட்டால், ஒரு டீஸ்பூன் நெய்யை மாவில் சேர்த்தால் மாவு இறுகி விடும்

