ADDED : ஆக 08, 2026 06:59 AM
l மோர் மீதமாகிவிட்டால், வேக வைத்த ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு போட்டால், சீக்கிரமாக புளிக்காமலும், வாடை வராமலும் இருக்கும்
l குழம்பு, பொரியல், குருமாவில் தேங்காய்க்கு பதில் கசகசா வை பொடியாக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்
l பழங்களை கொண்டு ஸ்மூத்தி அல்லது சாலட் தயாரிக்கும் போது, கொஞ்சமாக ஜாம் சேர்த்தால் நிறம், சுவை அட்டகாசமாக இருக்கும்
l சாதம் கொதிக்கும்போது இரண்டு துளி எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டால், சாதம் தும்பை பூ போல வெண்மையாக இருக்கும்
l மோர் குழம்பை தாளிக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், வழக்கத்தை விட குழம்பு கூடுதல் டேஸ்டில் இருக்கும்
l சேப்பங்கிழங்கை குக்கரில் நேரடியாக வேகவைப்பதற்கு பதில், வடிகட்டியில் வைத்து ஆவியில் வேக வைத்தால், அதிகம் குழையாது
l உளுந்தம் பருப்புடன் அப்பளத்தை சேமித்து வைத்தால், நீண்ட நாட்கள் ஆனாலும் கெட்டு போகாது
l பஜ்ஜி மாவில் தேங்காய் துருவல், எள் சேர்த்து செய்தால் பஜ்ஜியின் சுவை கூடும்
l புளி சாதம் செய்யும் போது கொஞ்சமாக பால், பெருங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்
l கேரட்டை தோல் சீவி ஆவியில் வேகவைத்து, மிக்ஸியில் அரைத்து நெய்யில் வதக்கி அல்வா செய்தால் சூப்பரான டேஸ்டில் வரும்
l பருப்பு வகைகளை சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்தால் வாயு தொல்லை குறையும்.
l எலுமிச்சை சாதத்திற்கு தாளிக்கும் போது, மெல்லியதாக நறுக்கிய குடைமிளகாயை சேர்ந்து வதக்கினால், சுவை மேலும் அருமையாக இருக்கும்
l முட்டை தொக்கு செய்யும் போது பெரியவெங்காயம் அதிகம் சேர்த்தால் சுவை நன்றாகஇருக்கும்
l பலகாரங்கள் பொரிக்கும் முன், சூடான எண்ணெயில் லேசாக தட்டிய இஞ்சி துண்டை போட்டு சிறிது நேரம் வறுத்து எடுத்து விட்டால், எண்ணெய் சுத்தமாக இருக்கும் பலகாரங்களும் சுவையாக பொரியும்
l வாழைக்காய் வறுவல் செய்யும் போது பூண்டு பற்களை தட்டி சேர்த்தால் வாயு பிரச்னை தீராது
l ரசம் தயாரித்து இறக்கும் போது பன்னீரை சில துளிகள் சேர்த்தால், பன்னீர் ரசமாக மாறும்
l இட்லி மாவு புளித்து விட்டால் சிறிதளவு மஞ்சள் துாள், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து பனியாரம் சுடலாம்
l தட்டை தயாரிக்கும் போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகளை மாவில் சேர்த்தால், நறுமணமும், சுவையும் அதிகரிக்கும்
l பொடி இட்லி செய்யும் போது நிறைய கொத்தமல்லி இலைகள் துாவினால் வாசனையாக இருக்கும்.
