
மொறு மொறு தின்பண்டங்கள் என்றால், சட்டென நினைவுக்கு வருவது முறுக்கு, தட்டை எனும் நிப்பட். இவற்றை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். கடலை மாவு மட்டுமின்றி, ரவை பயன்படுத்தியும் சுவையான தட்டை செய்யலாம். அதை எப்படி செய்வது என, பார்க்கலாமா?
செய்முறை முதலில் வேர்க்கடலையை மிக்சியில் போட்டு, பொடித்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை துாள், சீரகம், எள், கடலை மாவு, மிளகாய் துாள், ரவை, அரிசி மாவு, உப்பு சேர்த்து, சிறிதளவு சூடான எண்ணெய் சிறிதளவு ஊற்றி பிசையவும். 10 நிமிடம் ஊற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி, அதை வட்டமாக தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரவை தட்டை ரெடி.
இதை தயாரிக்க அதிகபட்சம் அரை மணி நேரம் போதும். வெளியில் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் வயிற்றை பாழாக்குவதை விட, வீட்டிலேயே எளிமையான தின்பண்டத்தை தயாரித்துக் கொடுப்பது நல்லது.
- நமது நிருபர் -

