சமையல் செய்யும் போது உணவு சுத்தமாக இருப்பது போல், மனசும் நிம்மதியாக இருக்க வேண்டும். அப்போது தான் எந்த உணவு செய்தாலும் சுவை அருமையாக இருக்கும்.
கிழங்கு, பருப்பு, பயிறு வகைகளை வேக வைக்கும் போது, வெந்த பின், உப்பு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
பாலித்தீன் கவரில் பச்சைத் தக்காளிகளுடன், ஒரு பழுத்த தக்காளியையும் போட்டு வைத்தால் அனைத்து தக்காளிகளும் பழுத்து விடும்.
பச்சை பயிறை முளை கட்டுவதற்கு, அதை ஊற வைத்து, ஹாட் பாக்ஸில் போட்டு வைக்கலாம்.
'சிக்கன் 65' நன்றாக வருவதற்கு மசாலா சேர்த்த பின், அரை மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
>> இஞ்சியை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து குலுக்கி வைத்தால் தயிர் சாதத்திற்கு தொட்டு கொள்ளலாம்.
>> 'சிக்கன் கிரேவி' செய்யும் போது காரம் அதிகமாகிவிட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
பீட்ரூட் அல்வா செய்யும் போது, பீட்ரூட்டை பாலில் வேக வைத்துவிட்டு, பிறகு மசித்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
கேரட் அல்வா செய்யும் போது சிறிது பால் பவுடர் சேர்த்தால் சுவை 'டாப் டக்கர்' தான்.
சாதம் வடிக்கும் போது சற்று குழைந்துவிட்டால் சிறிதளவு நல்லெண்ணெயை சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.
இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது, சிறிது மஞ்சள் துாள், உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து அரைத்தால் பத்து நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

