பூரி மாவு பிசையும் போது, சூடான எண்ணெயை ஊற்றி பிசைந்தால் பூரி மிருதுவாகவும் உப்பலாகவும் வரும்
பலாக்கொட்டை வைத்து சமைக்கும் போது சிறிதளவு பூண்டு பற்களை தட்டி சேர்க்க வேண்டும், இதனால் வாயு பிரச்னை வராது
பொன்னாங்கண்ணி கீரையை நெய் விட்டு வதக்கி மிளகு, உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் தயார்
தக்காளி சாதத்தில் மீல்மேக்கர் சேர்த்து செய்தால் சுவையை மறக்க முடியாது
பச்சை வேர்க்கடலை குழம்பு செய்யும்போது வேர்க்கடலையை ஊறவைத்து சேர்த்தால் சீக்கிரத்தில் வெந்துவிடும்
எண்ணெயில் கடுகு சேர்த்ததும் வெடிக்காமல் இருக்க சிறிதளவு மஞ்சள் துாள் சேர்க்க வேண்டும்
சர்க்கரை பொங்கலில் இறுதியாக தேங்காய் பால் சேர்த்து இறக்கினால் 'உச்' கொட்டி சாப்பிடலாம்
சிக்கன் - 65 சாப்பிடும் போது, சிக்கன் பீஸ் மீது மிளகு துாள், வெங்காயம் வைத்து சாப்பிட்டால் சுவைக்கு தனி மவுசு
வெஜிடபிள் பிரியாணியில் பெரிய மீல் மேக்கருக்கு பதிலாக, சிறிய அளவிலான மீல் மேக்கர்களை சேர்த்து கொள்ளும் போது சுவை சூப்பர்
சுண்டல், கடலை வேக வைத்து சாப்பிடும் போது அதன் மீது தேங்காய் துருவல் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். - நமது நிருபர் -