- நமது நிருபர் -:
l வடைக்கு மாவு அரைக்கும் போது, தண்ணீர் சிறிது அதிகமாகி விட்டால், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்தால் மாவு இறுகி விடும்.
l பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்தால், பஜ்ஜி உப்பலாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
l பொங்கல் செய்யும் போது, தண்ணீர் அதிகமாகி விட்டால், அதனுடன் சிறிதளவு வறுத்த ரவையை கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.
l குக்கரில் கருணை கிழங்கை வேகவைத்து, அதை மசால் வடை மாவுடன் சேர்த்து வடை சுட்டால், வித்தியாசமான சுவையில் இருக்கும்.
l இட்லி உப்புமா செய்யும் போது, காய்கறிகளை பொடியாக நறுக்கி வதக்கி சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.
l இட்லி மாவில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, இட்லி வேகவைத்தால் மென்மையாக இருக்கும்.
l டயட்டில் கொண்டைக்கடலை சேர்த்து கொண்டால் பசியை கட்டுப்படுத்தும்.
l ஆப்பம் செய்யும் போது, ஒரு ஸ்பூன் தயிரை சேர்த்துக்கொண்டால், ஆப்பத்தின் உட்புறம் நன்கு வெந்து மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
l வடகம் மாவில் சிறிது சோம்பு கலந்து காயவைத்து பொரித்து சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.

