தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ நொறுக்குகள்

 நொறுக்குகள்

 நொறுக்குகள்


ADDED : ஜூலை 03, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

ரசத்தில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை அரைத்து சேர்த்தால், ரசத்தின் சுவை நன்றாக இருக்கும்.

l கருவாட்டு குழம்பு செய்யும் போது கடைசியாக நான்கு பல் பூண்டுகளை தட்டி போட்டால், குழம்பின் சுவை கூடும்.

l மோர் குழம்பு செய்யும் போது தாளிப்புக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், குழம்பின் சுவை அதிகரிக்கும்.

l ரவை வறுக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்து வறுத்தால், ரவையில் நீண்ட நாட்கள் புழுக்கள் வராமல் இருக்கும்.

l தோசைக்கு மாவு அரைக்கும் போது அரிசி, உளுந்துடன் சிறிதளவு ஜவ்வரிசியும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.

l இட்லிக்கு மாவு அரைக்கும் போது அதனுடன் சிறிது வடித்த சாதம் சேர்த்து அரைத்தால், இட்லி பஞ்சு போல மென்மையாக இருக்கும்.

l துவரம் பருப்பு வேகவைக்கும் போது சிறிதளவு நெய் சேர்த்து வேகவைத்தால் பருப்பு எளிதில் வெந்துவிடும்.

l கேரட் சூப் செய்யும் போது, அதில் சிறிதளவு வறுத்த சேமியாவை சேர்த்தால் சூப் சுவையாக இருக்கும்.

l எந்த வகை சட்னியிலும் சிறிதளவு பூண்டு சேர்த்து அரைப்பது உடல்நலத்திற்கு நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us