ADDED : ஜூலை 25, 2026 12:26 AM

- நமது நிருபர் -:
* கேசரி செய்யும் போது கேசரி பவுடர் சேர்க்காமல், குங்குமப்பூ சேர்த்தால் சுவை, மணம் கூடும்.
* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது மீந்துபோன சாதத்தை சேர்த்து அரைக்கலாம்.
* வாழைத்தண்டு கூட்டு செய்யும் போது பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
* உளுந்து வடை செய்யும் போது நிறைய கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் வடை வாசனையாக இருக்கும்.
* வெங்காயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு, சில மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த பின், வெங்காயத்தை நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படாது.
* அடை மாவில் துருவிய கேரட், கோஸ் சேர்த்து அடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது புளித்த மோர் சேர்த்து கொண்டால், வெண்டைக்காய் மொறுமொறுப்பாக இருக்கும்.
* பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது, உருண்டைகளை பொரித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* சுண்டல் வேக வைத்து சாப்பிடும் போது தாளித்து தேங்காய் துருவல் போட்டு சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.
* முட்டை தொக்கு செய்யும் போது பெரிய வெங்காயம் நிறைய சேர்த்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
* கேரட்டின் தலைப்பகுதியை வெட்டிவிட்டு ஸ்டோர் செய்தால், கேரட் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
* வெந்தய குழம்பு செய்யும் போது, சிறிதளவு எள்ளு பொடி சேர்த்துக்கொண்டால் குழம்பு வாசனையாக இருக்கும்.
சப்பாத்தி சூடாக இருப்பதற்கு, சப்பாத்தியை சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
* முருங்கைப்பூக்களை தேங்காய் எண்ணெய்யில் லேசாக வறுத்து, மோர்க்குழம்பில் சேர்த்து ஒரு கொதி வரும்வரை சமைத்தால், குழம்பில் மணமும் சுவையும் அதிகரிக்கும்.
* மைதாவில் போளி செய்வதற்கு பதிலாக, கோதுமை மாவில் போளி செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
* சாம்பார் நீர்த்து போயிருந்தால், பொட்டுக்கடலை பொடியை சிறிதளவு சேர்த்து கொதிக்கவிட்டால், விரைவில் சாம்பார் கெட்டியாகி விடும்.
* மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து அதில் கொஞ்சம் தேங்காய் துருவலும், சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
