
சிக்கன், மட்டனில் மட்டுமின்றி, காய்கறிகளிலும் கபாப் செய்யலாம். அசைவம் விரும்பாதவர்களும், இதை சாப்பிடலாம். குறிப்பாக ஆலு கபாப் சுவையாக இருக்கும்.
செய்முறை உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, தோல் நீக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு, இரண்டு முதல் மூன்று நிமிடம் வேக வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, சோளமாவு, மிளகாய் துாள், கபாப் துாள், இஞ்சி, பூண்டு விழு, உப்பு சேர்த்து கலக்கவும். சிறிது நீர் விடு பஜ்ஜி மாவு பதத்தில் இருக்க வேண்டும். இந்த கலவையில் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு சிறிது மூடி வைக்கவும்.
அதன்பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் உருளைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போடவும். பொன்னிறமாக பொரித்தெடுத்தால், சுவையான ஆலு கபாப் தயார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் சிறார்களுக்கு செய்து கொடுக்கலாம். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அல்லது கிரீன் சட்னி பொருத்தமாக இருக்கும்
- நமது நிருபர் - .