ADDED : ஜன 24, 2026 05:13 AM

- நமது நிருபர் -
புராணங்களில் அவலுக்கு சிறப்பான இடம் உள்ளது. ஏழை பிராமணரான குசேலன், தன் நண்பரான ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்க சென்ற போது, அவல் கொண்டு சென்றார். இந்த காரணத்தால், கிருஷ்ண ஜெயந்தி நாளன்று அவலும் பிரசாதமாக இடம் பெறும். அவலில் உப்புமா, பாயசம் என, பலவிதமான சிற்றுண்டிகள் செய்யலாம். அவல் புலாவ் சுவைத்துள்ளீர்களா. சூப்பர் சுவையுடன் இருக்கும். அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
l அவல் - 2 கப்
l எண்ணெய் - 2 ஸ்பூன்
l பிரிஞ்சி இலை - 1
l பட்டை - சிறிய துண்டு
l சீரகம் - 1 ஸ்பூன்
l வெங்காயம் - 1
l உருளைக்கிழங்கு - 1
l கேரட் - 1
l பட்டாணி - அரை கப்
l முட்டைகோஸ் - சிறிதளவு
l பீன்ஸ் - சிறிதளவு
l பச்சை மிளகாய் - 2
l மஞ்சள் துாள் - அரை ஸ்பூன்
l உப்பு - தேவையான
அளவு
l சர்க்கரை - 2 ஸ்பூன்
l முந்திரி பருப்பு - ஒரு கைப்பிடி
l எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
l கொத்துமல்லி - 1 கைப்பிடி
l திராட்சை - 10
செய்முறை
முதலில் அவலை நீரில் நன்றாக கழுவி வடித்து வைக்கவும். அவல் அதிக மிருதுவாக இருக்கக்கூடாது. வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, சீரகம் போடவும். அதன்பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
சிறிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் சேர்ந்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி காய்கறிகளை வேக வைக்கவும். வெந்த பின் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.
அதன்பின், உப்பு, மஞ்சள் துாள், உப்பு, சர்க்கரையை சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் ஏற்கனவே தயாராக வைத்துள்ள அவலை போட்டு, நிதானமாக கலக்கவும். இதன் மீது பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை அலங்கரித்தால், சுவையான அவல் புலாவ் ரெடி.

