ADDED : மே 09, 2025 11:26 PM

உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்தமான காய்கறிகளில் ஒன்றாகும். இதை வைத்து போண்டா, சிப்ஸ், வறுவல் என, பல விதமான உணவு தயாரிக்கலாம்.
அதே போன்று பாம்பே ஆலு மசாலா, யு.கே., ரெஸ்டாரென்ட்களில் மிகவும் பிரபலமாம். இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா?
செய்முறை
முதலில் உருளைக்கிழங்குகளை நன்றாக கழுவி, பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நீரை வடிகட்ட, தோல் உறித்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, நெய் மற்றும் காநோலா எண்ணெய் ஊற்றவும். இதில் கருவேப்பிலை, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கடுகு, இஞ்சி, சீரகம் போட்டு வதக்கவும். இதில் மஞ்சள் துாள், தனியா துாள் சேர்த்து கலக்கவும்.
அதன்பின் இந்த கலவையில், உருளைக்கிழங்குகளை போட்டு கிளறவும். மசாலாவுடன் சேரும்படி நன்றாக கிளறவும்.
இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லி தழையை போட்டு கிளறினால், சுவையான பாம்பே ஆலு மசாலா ரெடி. இதை உணவுடன் தொட்டுக்கொள்ள மட்டுமின்றி, மாலை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
- நமது நிருபர் -

