ADDED : மார் 22, 2025 05:50 AM

கராவளி (கடற்கரை) பகுதிகளில், ஸ்பெஷல் பிஸ்கட் மிகவும் பிரபலம். வழக்கமான பஜ்ஜி, போண்டாவுக்கு பதிலாக கராவளி பிஸ்கட் செய்து பாருங்கள். சுவை நாக்கிலேயே ஒட்டிக் கொள்ளும்.
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, ரவையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இதே வாணலியில் நிலக்கடலை துாளை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். அதன்பின் வேறு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் கடுகை போடவும். அது வெடித்ததும், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
இந்த கலவையில் பெருங்காயம், மஞ்சள் துாள் போட்டு கிளறவும். அதன்பின் தேங்காய் துருவல், மஞ்சள் துாளை போட்டு வதக்க வேண்டும். ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள ரவை, நிலக்கடலையை போட்டு, இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
அதன்பின் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி வட்ட, வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுத்தால், நாவிற்கு சுவையூட்டும் கராவளி பிஸ்கட் தயார்.
தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி பொருத்தமாக இருக்கும். தக்காளி சாஸ் தொட்டும் சாப்பிடலாம்.
- நமது நிருபர் -