ADDED : ஜூலை 18, 2025 11:16 PM

பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து உட்பட, பலவிதமான ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆனால் இதை சாப்பிடுவதில் சிறார்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. பேரீச்சம் பழத்தில் பிஸ்கட் தயாரித்து தாருங்கள். விரும்பி சாப்பிடுவர்.
செய்முறை
மைதா மாவில் பேக்கிங் பவுடரை சேர்த்து, கட்டிகள் இல்லாமல் சல்லடையில் சலிக்கவும். இதை பாத்திரத்தில் போட்டு, சர்க்கரை துாள், பால் சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். இந்த கலவையை அரைமணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
அதன்பின் வெளியே எடுத்து, இதை அரை செ.மீ., தடிமனாக இருக்கும்படி இரண்டு சப்பாத்தி தட்டவும். முந்திரி பருப்பு மற்றும் பேரீச்சம் பழத்தை சிறு, சிறு துண்டுகளாக உடைத்து இரண்டையும் கலக்கவும், இவற்றை சப்பாத்திகள் மீது துாவவும். ஒரு ஸ்டீல் பாக்ஸ் மூடியை வைத்து, சப்பாத்தி மீது வைத்து அழுத்தி ஒரே வட்ட, வட்டமாக வெட்டவும்.
அதன்பின் மைக்ரோ ஓவனில் வைத்து, 15 நிமிடம் வேக வைத்தால், சுவையான பேரீச்சம் பழ பிஸ்கட் தயார். செய்வதும் எளிது
- நமது நிருபர் -.

