ADDED : ஆக 09, 2025 05:04 AM
சேமியா உப்புமா செய்யும் போது, சிறிதளவு நெய் சேர்த்தால் சுவை, வாசனை இரண்டும் கூடும். அரிசி வேகும் போது சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்தால், சாதம் வெண்மையாக இருக்கும். லெமன் சாதம் செய்யும் போது பூண்டு பற்களை தட்டி சேர்த்தால், சாதத்தின் சுவை சிறிதாக மாறும்.
முருங்கைக்கீரை பொறியல் செய்யும் போது சர்க்கரையை சேர்த்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். பருப்பு சாதத்தில் முருங்கைக்காயின் சதை பகுதியை சேர்த்தால் சுவை கூடும்.
மட்டன் சூப்பில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து குடிப்பது உடலுக்கு நல்லது. /
பன்னீர் பட்டர் மசாலா செய்யும் போது பன்னீரை பட்டரில் நன்றாக வறுத்து விட்டு பிறகு கிரேவியில் சேர்க்கலாம்.
தேங்காய் பால் அரைக்கும் போது சுடு தண்ணீர் ஊற்றி பிழிந்தால் தேங்காய் பால் நிறைய கிடைக்கும்.
உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, ஐஸ் வாட்டர் சேர்த்தால் வடை மெதுவாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுக்கும் போது, அதன் மேல் கொஞ்சம் அரிசி மாவு துாவினால் பொறியல் மொறுமொறுப்பாக இருக்கும்

