ADDED : ஆக 22, 2025 11:19 PM

செய்முறை பிரட் ஸ்லைஸ்களின் நான்கு ஓரங்களை வெட்டிவிட்டு, நடுப்பகுதியை எடுத்து கொள்ளவும். இவற்றை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போடவும். இதில் பாலை சிறிது, சிறிதாக ஊற்றி மிருதுவாக பிசையவும்.
சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். இதை சிறிது நேரம் மூடி வைக்கவும். அதன்பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் நீரும், சர்க்கரையையும் போடவும். சர்க்கரை பாகு ஆகும் வரை கலக்கவும். அதில் ஏலக்காய் துாள் போடவும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பிரட் கலவையை கட்டிகள் இல்லாமல், சிறு சிறு உருண்டைகள் ஆக்கவும், அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றவும்.
காய்ந்த பின், பிரட் கலவையை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு. பொன்னிறமாக பொறித்தெடுக்க வேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருப்பது அவசியம். அதிகமான தீயில் இருந்தால், கருகிவிடும். உள்ளே வேகாது. உருண்டைகள் பிடிக்கும் போது, விரிசல் இல்லாமல் இருக்கக் கூடாது. இருந்தால் எண்ணெயில் போட்டவுடன், மாவு பிரிந்து போகும். ஜா மூ ன்கள் ஆறிய பின், சர்க்கரை பாகில் போடவும். இவற்றின் மீது பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தாக்களை துாவி அலங்கரிக்கவும். சிறிது நேரம் மூடி வைத்த பின் பரிமாரலாம்.
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். வெறும் 10 நிமிடங்களில் பிரட் ஜா மூ ன் செய்யலாம். பல வீடுகளில் எப்போதுமே பிரட் இருக்கும். குடும்பத்தினருக்கு, வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு செய்து கொடுத்தால், உங்களுக்கு பாராட்டு நிச்சயம். இன்னும் சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது. அன்றைய தினம் இனிப்புகள் செய்வர். இனிப்பு பலகாரங்களின் பட்டியலில், பிரட் ஜா மூ னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

