ADDED : மார் 29, 2025 02:46 AM

இறைச்சியில் அதிக காஸ்ட்லியாக இருப்பது மட்டன். ஆனாலும் மட்டன் ரசிகர்களால் வாரத்தில் ஒருநாள் மட்டன் சாப்பிடாமல் இருக்க முடியாது. வார விடுமுறை நாட்களில், மட்டன் கடைகளில் கூட்டம் அலைமோதும்.
மட்டன் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு இரும்புச்சத்துக்கள்அதிகம் கிடைக்கும். ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மட்டன் உதவுகிறது.
வீடுகளில் மட்டனை வைத்து பிரியாணி, குழம்பு, கிரேவி, சுக்கா செய்து இருப்போம். மட்டனில் வடை கூட செய்யலாம். என்ன மட்டனில் வடையா என்ற கேள்வி எழும். நிச்சயமாக செய்ய முடியும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை:
அடுப்பை 'ஆன்' செய்து குக்கரில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின், மட்டன், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பவுடர், தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஏழு முதல் பத்து விசில் விட வேண்டும். அதற்குள் துவரம் பருப்பு, உருளைக்கிழங்கை நன்கு மசிய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி பட்டை, ஏலக்காயை பவுடராக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் கெட்டியாக பிசைந்த பின், கையில் வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மட்டன் கறி வடை தயார்.
துவரம் பருப்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து சேர்ப்பதால் சுவை நன்கு இருக்கும். மட்டன் கறி வடையை 'ஸ்நாக்ஸ்' மாதிரி சாப்பிடலாம். கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.
- நமது நிருபர் -