தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ சுவையான ஆரஞ்சு அல்வா!

 சுவையான ஆரஞ்சு அல்வா!

 சுவையான ஆரஞ்சு அல்வா!


ADDED : ஜூலை 25, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பாதாம் அல்வா, பூசணி அல்வா, முந்திரி அல்வா என, பல விதமான அல்வாக்களை சுவைத்திருப்பீர்கள். ஆனால், ஆரஞ்சு அல்வா சமைத்திருக்கிறீர்களா... அற்புதமான சுவையுடன் இருக்கும். அதை எப்படி செய்வது என, பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

l ஆரஞ்சு சாறு - 1 கப்

l சர்க்கரை - 1 கப்

l நெய் - கால் கப்

l ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்

l ரவை - 1 கப்

l முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி

செய்முறை

முதலில் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றவும். சூடானதும் ரவையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இதில் ஆரஞ்சு சாற்றை சேர்த்து, கட்டிகள் இல்லாமல் கிளறவும். அதன் பின் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். அல்வா கெட்டியானதும், ஏலக்காய் துாள் சேர்க்கவும்.

அதன் பின் நெய்யில் வறுத்து பொடித்த முந்திரிப்பருப்பை துாவி, நன்றாக கிளறவும். நெய் தடவிய தட்டில் அல்வாவை கொட்டி சமன்படுத்தவும். விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும். விருப்பம் இருந்தால் பொடித்த பாதாம் சேர்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தில், பல்வேறு விட்டமின்கள் உள்ளன. குட்டீஸ்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us