ADDED : அக் 04, 2025 04:32 AM

வழக்கமாக தோசைக்கு தக்காளி, தேங்காய் சட்னி என தொட்டு சாப்பிட்டு சலிப்பு ஏற்பட்டிருக்கும். இந்த சலிப்பை போக்க ஒரு முறை உருளைக்கிழங்கு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த சட்னியின் சுவை கண்டிப்பாக நாக்கில் நாட்டியமாடும்.
செய்முறை உருளைக்கிழங்கு, தக்காளி, பூண்டு அனைத்தும் தனித்தனியாக அடுப்பில் சுட்டு எடுத்துக் கொள்ளவும். சுட்டு எடுக்கப்பட்ட உருளைக்கிழங்கின் தோலை உரித்து நீக்கவும். பிறகு தீயில்சுட்ட அனைத்தையும் அம்மியில் போட்டு சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, மல்லி, கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில்அரைத்து வைத்த கலவையை சேர்க்கவும். இதில் உப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் நன்றாக கிளறி எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு சட்னி தயார். இதை தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் சுவை அற்புதமாக இருக்கும்.
- நமது நிருபர் -