ADDED : ஜன 24, 2026 05:11 AM
- நமது நிருபர் -:
சாம்பாரை அடுப்பிலிருந்து இறக்கும் முன், இரண்டு தக்காளி பழங்களை மிக்சியில் அரைத்து சேர்த்தால், சாம்பாரின் சுவை நன்றாக இருக்கும்.
l வாழைக்காய் பொரியல் செய்யும் போது, மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்தால் மணம், சுவை இரண்டும் நன்றாக இருக்கும்.
l மெதுவடைக்கு மாவு அரைக்கும் போது, சிறிதளவு துவரம் பருப்பை சேர்த்து அரைத்தால், வடை மிகவும் மெதுவாக இருக்கும்.
l ஆரஞ்சு பழத்தோலை பொடியாக்கி, அதை ரசத்துடன் சேர்த்தால் மணம், சுவை கூடும்.
l துவரம் பருப்பு வேகவைக்கும் போது, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து வேகவைத்தால், சாம்பார் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
l பிரெட்டை துண்டுகளாக்கி காயவிட்டு, அதை புலாவ், பிரியாணி போன்றவற்றில் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
l சுண்டைக்காயை தயிரும் உப்பும் சேர்த்து ஊறவைத்து, வெயிலில் நன்றாக காயவைத்து வத்தலாக செய்து, அதை வத்தல் குழம்பில் சேர்த்தால், குழம்பு சுவையாக இருக்கும்.
l தோசை மாவில் சாதம் வடித்த கஞ்சியை ஊற்றினால், தோசை மெதுவாக வரும். துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேங்காய் துண்டை சேர்த்தால், பருப்பு சீக்கிரம் வெந்து வெண்ணெய் போல குழைவாகும்.

