ADDED : ஜூலை 05, 2025 06:29 AM

தினமும் புதுப்புது உணவு வகைகளை சுவைப்பது, பலரின் விருப்பமாகும். பிரைட் ரைஸ்களில் பல ரகங்கள் உள்ளன. வெஜ் பிரைட் ரைஸ், எக் ரைஸ் என பல்வேறு பிரைட் ரைஸ்களை சுவைத்திருப்பீர்கள். ஸ்வீட் கார்ன் பிரைட் ரைஸ் சுவைத்துள்ளீர்களா. இல்லையென்றால் எப்படி செய்வது என்பதை, தெரிந்து கொள்ளலாமா?
தேவையான பொருட்கள்
* அரிசி - 1 கப்
* ஸ்வீட் கார்ன் - 1கப்
* இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 ஸ்பூன்
* வினிகர் - 1 ஸ்பூன்
* சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
* வெங்காய தாள் - 2 ஸ்பூன்
* சமையல் எண்ணெய் - அரை கப்
* உப்பு - தேவையான அளவு
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1
செய்முறை
முதலில் அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைத்து வேக வைக்க வேண்டும்; ஸ்வீட் கார்னை தனியாக வேக வைக்கவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும், அதன்பின் ஸ்வீட் கார்ன், வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் போட்டு நன்றாக கலக்கவும். இதில் ருசிக்கு தேவையான உப்பு, ஏற்கனவே வேக வைத்த சாதத்தை போட்டு நன்றாக கலந்தால் சுவையான ஸ்வீட் கார்ன் பிரைடு ரைஸ் தயார். சூடாக பரிமாறலாம்
- நமது நிருபர் -.