ADDED : ஆக 09, 2025 04:59 AM

கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பாதாம் அல்வா உட்பட பல விதமான அல்வாக்களை ருசித்திருப்பீர்கள். மில்க் அல்வா ருசித்துள்ளீர்களா. இது மிகவும் சுவையானது. குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமானது.
செய்முறை முதலில் பாலை பாத்திரத்தில் ஊற்றி, கொதிக்க வைக்கவும். மிதமான தீயில் வைத்து, இரண்டு கப் பாலை, ஒரு கப் ஆகும் வரை கொதிக்க விடவும். அதன்பின் ரவை, சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். கை விடாமல் கிளறவும்.
கலவை கெட்டியானதும், நெய் ஊற்றி அடிபிடிக்காமல் கிளறவும். அதன்பின் ஏலக்காய் துாள் போட்டு சில நிமிடங்கள் வைக்கவும். விருப்பம் உள்ளவர்கள் முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தாவை பொடித்து துாவலாம். சூடாக பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். திடீரென விருந்தாளிகள் வந்தால், மில்க் அல்வா செய்து கொடுத்து அசத்தலாம். அதை தயாரிக்க அதிகபட்சம் 10 நிமிடம் ஆகும்; செய்வதும் எளிது. - நமது நிருபர் -

