ADDED : ஆக 09, 2025 05:02 AM

மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகள் பசிக்கிறது. சாப்பிட ஸ்நாக்ஸ் கொடு என்று தன் தாயிடம் கெஞ்சுவர். இதுவரை பிரெட் மூலம் பல ரெசிபிக்கள் வந்துள்ளன. சாண்ட்விச், பிரெட் டோஸ்ட், பிரெட் ஆம்லெட் என பல ரெசிபிகள் உள்ளன. ஆனால், இம்முறை 'முட்டை பிரெட் ஸ்நாக்ஸ்' செய்து தரலாம் .
செய்முறை வானலியில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் துாள், கரம் மசாலா, மிளகாய் துாள், மிளகு துாள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து, ஐந்து நிமிடம் வேக வைத்து, தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின், வாணலியில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். பின், ஏற்கனவே கிளிறி எடுத்து வைத்திருந்தவைகளை, முட்டையுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
துண்டாக்கப்பட்ட பிரெட்களை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு, மசாலாக்கள் பிரெட்டில் சேரும் வரை வதக்கவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிட்டால், சூடான முட்டை பிரெட் ரெசிபி தயார் - நமது நிருபர் - .

