ADDED : ஜூலை 18, 2025 11:16 PM

அசைவ உணவு பிரியர்கள் சிக்கனில் செய்யப்படும் கிரேவி, சிக்கன் 65, பிரியாணியை விரும்பி சாப்பிடுவர். தற்போது நெய்யில் ரோஸ்ட் செய்யப்படும் ஸ்பைசி சிக்கன் சுக்கா வீட்டில் எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
செய்முறை
அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து நெய் ஊற்றவும். சோம்பு பவுடர் சேர்த்து நன்கு தாளித்த பிறகு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின், தோல் உரித்த சின்ன வெங்காயம், பொடிசாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின், நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்கி விடவும்.
மிளகாய் பவுடர், மல்லி பவுடர், மஞ்சள் பவுடர், சோம்பு பவுடர், உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின், நன்றாக கழுவி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வாணலியை, ஒரு தட்டால் மூடி வைத்து விடவும்.
சிக்கன் வெந்தவுடன் சிறிதளவு நெய், மிளகு பவுடர் சேர்த்து நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சூடான, சுவையான காரமான நெய் ரோஸ்ட் ஸ்பைசி சிக்கன் சுக்கா தயார். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்
- நமது நிருபர் -.

