தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/சின்ன வெங்காயத்துடன் துவையல் அரைத்தால் சுவை அள்ளும்!

சின்ன வெங்காயத்துடன் துவையல் அரைத்தால் சுவை அள்ளும்!

சின்ன வெங்காயத்துடன் துவையல் அரைத்தால் சுவை அள்ளும்!


UPDATED : நவ 14, 2026 03:27 AM

ADDED : நவ 13, 2026 07:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 03:27 AM ADDED : நவ 13, 2026 07:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

 பால் அல்வா தயாரிக்கும் போது சிறிதளவு கோகோ பவுடர் சேர்த்து கிளறினால், சாக்லேட் சுவையுடன் கூடிய பால் அல்வா தயாராகிவிடும்.

 அடை தயாரிக்கும் போது சிறிதளவு சோளமாவை சேர்த்தால், அடை மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும்

 கோதுமை வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிதளவு வெந்தயம் போட்டு வைத்தால், பூச்சிகள் அண்டாமல் இருக்கும்

 சர்க்கரை பொங்கல் செய்து இறக்கியதும், ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறினால் மணமும், சுவையும் அதிகரிக்கும்

 துவையல் தயாரிக்கும் போது, சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்

 முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, முள்ளங்கியை சிறிது எண்ணெய்யில் நன்றாக வதக்கி எடுத்து பின் சாம்பார் வைத்தால், முள்ளங்கியின் சுவை மேலும் அதிகரிக்கும். சாம்பாரும் ருசியாக இருக்கும்

 பஜ்ஜி தயாரிக்கும் மாவில் ஒரு கரண்டி தோசை மாவு சேர்த்தால் உப்பலாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்கும்

 தோசை கல்லில் சிறிது உப்பு தண்ணீர் தெளித்துவிட்டு தோசை ஊற்றினால், தோசை நன்றாக வரும்

 வெண்டைக்காய் வதக்கும் போது மூன்று டீஸ்பூன் புளித்த மோர் சேர்த்தால், பிசுபிசுப்பு குறைந்து சுவையாக இருக்கும்

 பருப்பு உருண்டை குழம்புக்கு உருண்டை பிடிக்கும் போது, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து உருட்டினால், குழம்பில் உருண்டைகள் கரையாமல் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us