ADDED : அக் 18, 2025 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்முறை முதலில் அடிகனமான வாணலியை, அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து நெய் ஊற்றவும். நெய் கரைந்ததும் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன்பின் இதில் பால் பவுடர், சர்க்கரை போட்டு கை விடாமல் கிளறவும்.
பால் கலவை, கெட்டியாகி திரண்டு வரும் போது ஏலக்காய் துாள், கலர் சேர்த்து கிளறவும். அதன்பின் ஒரு அகலமான தட்டில் நெய் தடவி, பர்பியை கொட்டி சமன்படுத்தவும். அதன் மீது பொடித்த பாதாம், பிஸ்தா துாவி அலங்கரிக்கவும். பர்ப்பியை சிறு, சிறு துண்டுகளாக வெட்டவும். இதுவே ரங்கீலா பர்பி. தீபாவளிக்கு செய்து சுவையுங்கள்.

