ADDED : ஜூன் 06, 2025 11:40 PM

பலருக்கும் நாக்குக்கு சுவையாக சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே நேரத்தில் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என, விரும்புவர். சமீப நாட்களில் உடல் ஆரோக்கியத்தின் மீது, அதிக அக்கறை காட்டுகின்றனர். சோயா பீன்சும் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. இதில் பலவிதமான உணவு தயாரிக்கலாம்.
சோயா பீன்ஸ் வெஜ் பான் கேக் எப்படி செய்வது என, பார்க்கலாமா.
செய்முறை
சோயா பீன் மற்றும் அரிசியை, தனித்தனியாக நீரில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் சோயா பீன்சை பிதுக்கி, மிக்சியில் போட்டு அரைக்கவும். அதை எடுத்து கொண்டு அரிசி, தயிர், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு நைசாக அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அரைத்த அரிசி, சோயா பீன்ஸ், சிறிதாக நறுக்கிய தக்காளி, குடமிளகாய், தக்காளி, துருவிய கேரட், உப்பு, சீரகம், கொத்துமல்லி இலையை போட்டு, நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்த்து கொள்ளவும். மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா போடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றி, தட்டால் மூடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். இரண்டு நிமிடம் வேக வைத்து திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்த பின் எடுத்தால், சுவையான சோயா பீன்ஸ் வெஜ் கான் கேக் தயார்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டுக்கொள்ள பொருத்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது
- நமது நிருபர் -.