ADDED : நவ 29, 2025 05:53 AM

: குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானதை சேர்க்கும் வகையில், வெல்ல தோசை செய்யலாம். வெல்லத்தில் கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
l கோதுமை மாவு --- 2 டம்ளர்
l அரிசி மாவு- - ஒரு டம்ளர்
l வெல்லம் -- 3 கப்
l நெய் -- தேவையான அளவு
l தேங்காய் துருவல் -- சிறிதளவு
l ஏலக்காய் துாள் -- சிறிதளவு
செய்முறை:
l வெல்லத்தை தட்டி துாசி இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.
l ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு சூடாக்கி, கரைசல் நிலையில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
l ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் கோதுமை மாவு, ஒரு டம்ளர் அரிசி மாவு இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
l இதனுடன் சிறிதளவு ஏலக்காய் துாள் சேர்த்து, வெல்லக் கரைசலையும் சேர்த்து, தோசை சுடும் பதத்திற்கு கரைந்து கொள்ள வேண்டும். இப்போது வெல்லத் தோசை செய்வதற்கான மாவு ரெடி.
l தோசைக் கல்லை சூடாக்கி, குழந்தைகள் சாப்பிடும் வகையில் உங்களுக்கு ஏற்ற வடிவில் தோசை மாவை ஊற்றிக் கொள்ளவும்.
l நெய் சேர்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்தால், சுவையான, ஆரோக்கியம் நிறைந்த வெல்லத் தோசை தயார்
- நமது நிருபர் -.

