
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறார் விடுமுறையில் வீட்டில் இருந்தால், தின்பண்டங்கள் கேட்டு பிடிவாதம் பிடிப்பர். அவசரத்துக்கு என்ன தின்பண்டம் செய்வது என, குழப்பம் ஏற்படும். திடீர் கோதுமை லட்டு செய்யலாமே.
செய்முறை அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, கோதுமை மாவு போடவும். மிதமான தீயில் வைத்து, ஐந்து நிமிடம் வறுக்கவும். இதில் நெய் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கலக்கவும். அதன்பின் பொடித்து வைத்த பாதாம், முந்திரி, பிஸ்தாக்களை சேர்க்கவும்.
இக்கலவையில் பொடித்த வெல்லம், ஏலக்காய் துாள் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். மாவு திரண்டு வரும் போது, அடுப்பை அணைத்து விடவும். சிறிதளவு ஆறிய பின் இதனை விருப்பமான வடிவில் லட்டு பிடிக்கவும். இது ஆரோக்கியமானது, சுவையானது; செய்வதும் எளிது. அடம் பிடிக்கும் குட்டீஸ்கள், வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு செய்து கொடுக்கலாம்.
- நமது நிருபர் -

