
- நமது நிருபர் -
உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள், இரவு உணவாக சப்பாத்தி சாப்பிடுவர். பெரும்பாலான வீடுகளில், சப்பாதிக்கு உருளை கிழங்கு குருமா தான் செய்வர். அதுவும் ஒரே சுவையில் செய்து போர் அடித்து விட்டதா. சற்று வித்தியாசமான சுவையில் உருளைகிழங்கை வைத்து குருமா செய்ய நினைக்கிறீர்களாக? அப்படி என்றால் வடமாநில ஸ்டைலில் ஜீரா ஆலு சப்ஜி செய்யலாமே.
தேவையான பொருட்கள்
l நான்கு உருளைக்கிழங்கு
l நெய் தேவையான அளவு
l நான்கு காய்ந்த மிளகாய்
l ஒரு டீஸ்பூன் சீரகம்
l ஒரு டீஸ்பூன் தனியா
l அரை டீஸ்பூன் இஞ்சி விழுது
l இரண்டு தக்காளி
l ஒரு டீஸ்பூன் சீரக பவுடர்
l ஒரு டீஸ்பூன் சோம்பு பவுடர்
l ஒரு டீஸ்பூன் மிளகாய் பவுடர்
l அரை டீஸ்பூன் மஞ்சள் பவுடர்
l ஒரு டீஸ்பூன் பெருங்காய பவுடர்
l அரை கப் தயிர்
l அரை டீஸ்பூன் சர்க்கரை
l கொத்தமல்லி இலை சிறிதளவு
செய்முறை
அடுப்பை ஆன் செய்து வட்ட பாத்திரத்தில் உருளை கிழங்கை போட்டு நன்கு வேக வைக்கவும். பின், அந்த பாத்திரத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து, நெய் ஊற்ற வேண்டும். நெய் சூடானதும் காய்ந்த மிளகாய், சீரகம், தனியா, இஞ்சி சாறு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி தோல் நன்கு வதங்கியதும் சீரகம், சோம்பு, மஞ்சள், மிளகாய், பெருங்காய பவுடர்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறி, வாணலியை தட்டு வைத்து மூடி விடவும்.
மசாலா கலவை நன்கு கொதித்த பின், தயிர், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும். வேக வைத்திருக்கும் உருளை கிழங்கை நன்கு மசித்து சேர்த்து, இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலையை துாவி இறங்கினால், சுவையான ஜீரா ஆலு சப்ஜி தயார். சப்பாதிக்கு மட்டுமின்றி இட்லி, தோசை, சாதத்திற்கும் தொடுகறியாக வைத்து சாப்பிடலாம்.

