ADDED : அக் 25, 2025 05:09 AM

கேரளா என்றாலே உணவில் முதலில் நினைவுக்கு வருவது புட்டும், கடலைக் கறியும் தான். அதற்கு பின் இடியாப்பம், பரோட்டா, கடல் சார்ந்த உணவுகளு க்கு கேரளா, பெயர் பெற்றது. இங்கு சுற்றுலா செல்வோர் உணவுகளை ருசித்து சாப்பிட்டு அடிபோலி என்று சொல்வது உண்டு. கேரள ஸ்டைலில் சிக்கன் தோரனை நமது வீட்டிலும் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும். இதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி பின், சிக்கன் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலா, சீரக துாள், மிளகு துாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி வதக்கி வெந்ததும் இறக்கினால் சுவையான சிக்கன் தோரன் தயார்.
இந்த ரெசிபிக்கு தேங்காய் துருவல் தான் முக்கியம். எந்த அளவுக்கு சிக்கன் எடுக்கிறோமோ அதை அளவுக்கு தேங்காய் துருவலையும் எடுக்க வேண்டும். பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் சேர்ப்பதும் கூடுதல் சுவை கொடுக்கும்.
சூ டான சாதத்தின் மீது நெய் ஊற்றி, சிக்கன் தோரனை வைத்து சாப்பிட்டால் சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். ரச சாதம், சாம்பார் சாதத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.
சிக்கனில் ஒரே மாதிரியான ரெசிபியை செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, அடுத்த முறை தோரன் செய்து சாப்பிடலாமே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
- நமது நிருபர் -

