உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 28, 2026 11:19 PM

அ நிறம் | அளவு
- நமது நிருபர் -: கேரளா ஸ்டைல் பால் பாயாசத்தை வீட்டிலேயே செய்து அசத்தலாம். இதை செய்வதற்கு அதிக பொருட்கள், அதிக நேரம் தேவைப்படாது. சுவை அற்புதமாக இருக்கும்.
செய்முறை வாணலியில் பாலை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்கவும். பால் நன்கு கொதித்ததும் கழுவி வைத்துள்ள பச்சரிசியை பாலில் சேர்க்கவும். மிதமான தீயில், அரிசி வெந்து பால் சுண்டிவரும் வரை கிளறவும்.
பால் பாதியாக குறைந்து, கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்றாக கரைந்து பாயசம் லேசான இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறும் போது, ஏலக்காய் துாள் சேர்க்கவும்.
இதில், வறுத்த முந்திரியை சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான கேரளா ஸ்டைல் பால் பாயசம் தயார். இதை மதிய உணவின் போது சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
