ADDED : அக் 11, 2025 04:53 AM

சோளம் உடல் ஆரோக்கியத்துக்கு, மிகவும் நல்லது. இதில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவும். உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதே காரணத்தால் பலரும், இதை உணவில் சேர்க்கின்றனர். இட்லி, வடை, கட்லெட், முறுக்கு உட்பட, பல விதமான தின்பண்டங்களுக்கு சோள மாவு பயன்படுத்தப்படுகிறது. இந்த மாவில் சூப்பரான அல்வாவும் செய்யலாம்.
செய்முறை
முதலில் சோள மாவை சல்லடையால் சலிக்கவும். அடுப்பில் வாணலி வைத்து சோளமாவை போட்டு வறுக்கவும். இதில் நெய் சேர்த்து கை விடாமல் கிளறவும். மிதமான தீயில் இருக்க வேண்டும்.
வேறு ஒரு அடுப்பில் பாத்திரம் வைத்து, துருவிய வெல்லத்தை போடவும். இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
வெல்லம் நன்றாக கரைந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, வெல்ல கலவையை ஓரமாக வைக்கவும். இதில் சர்க்கரை ஏதும் சேர்க்கக் கூடாது. வெல்லத்தை பாகு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கரைந்தால் போதும்.
இதற்கிடையே அடுப்பில் உள்ள சோளமாவை, அவ்வப்போது கிளறி விடவும். அதன்பின் ஏற்கனவே தயார் செய்துள்ள வெல்ல கலவையை, மாவில் சேர்த்து கெட்டியாகாமல் கிளறவும்.
இதில் நெய், ஏலக்காய் துாள், சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் கூடுதல் நெய் சேர்க்கலாம். இரண்டு ஸ்பூன் பால் சேர்த்தால், சுவை அதிகரிக்கும்.
பாத்திரத்தில் நெய் தனியாக பிரிந்து வரும்போது, அகலமான தட்டில் நெய் தடவி, அல்வாவை கொட்டி சமமாக பரப்பவும். ஆறிய பின் விருப்பமான வடிவத்தில் வெட்டினால், சுவையான சோளமாவு அல்வா தயார். குட்டீஸ்கள் முதல், பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி சாப்பிடுவர்
- நமது நிருபர் - .