'சர்க்கரை இல்லாத ஸ்வீட்' நந்தினியின் புதிய அறிமுகம்
'சர்க்கரை இல்லாத ஸ்வீட்' நந்தினியின் புதிய அறிமுகம்
ADDED : அக் 18, 2025 04:43 AM

பெங்களூரு: நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய வகையில், சர்க்கரை சேர்க்காத ஸ்வீட்டுகளை 'நந்தினி' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கர்நாடகா பால் கூட்டமைப்பின் நிறுவனமான 'நந்தினி' ஸ்வீட்டுகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் புது வித ஸ்வீட்டுகளை 'நந்தினி' அறிமுகம் செய்யும். அந்த வகையில், நீரிழிவு நோய் உள்ளவர்கள், சாப்பிடக்கூடிய வகையில் சர்க்கரை சேர்க்காத ஸ்வீட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடகா பால் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் பி.சிவசாமி கூறியதாவது:
நீரிழிவு நோய் உள்ளவர்கள் உண்ணக்கூடிய வகையில், சர்க்கரை சேர்க்காத நந்தினி ஸ்வீட்டுகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்வீட்டுகளை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
சர்க்கரை சேர்க்காத குலாப் ஜாமூன் 500 கிராம் 220 ரூபாய்க்கும்; வெல்லம் சேர்த்த பால்கோவா 500 கிராம் 170 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தசராவின் போது, நந்தினி சுவீட்களின் விற்பனை 7.50 லட்சம் கிலோவை தாண்டியது.
இவ்வாறு அவர் கூறினார்.

