
மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட, நொறுக்கு தீனி இல்லையா; கடைக்கு செல்ல சோம்பலா; வீட்டிலேயே செய்யலாம் சீரக பிஸ்கட்.
தேவையான பொருட்கள்
l வெண்ணெய் - 100 கிராம்
l பொடித்த சர்க்கரை -50 கிராம்
l உப்பு - அரை ஸ்பூன்
l சீரகம் - 1 ஸ்பூன்
l பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்
l மைதா மாவு -150கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரையை போட்டு நன்றாக கலக்கவும். இது, வெண்ணெய் பதத்தில் இருக்க வேண்டும். இந்த கலவையில், உப்பு, சீரகம், பேக்கிங் பவுடர், மைதா மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் பிசையவும்.
மாவை சப்பாத்தி கல்லில் வைத்து, ஓரளவு தடிமனாக தட்டவும். இதனை வட்ட வடிவமாக பிஸ்கட் போன்று வெட்டி கொள்ளவும். இதனை குளிர்ச்சாதன பெட்டியில், அரை மணி நேரம் வைத்திருக்கவும். அதன்பின் அடுப்பில் அலுமினிய பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றவும்; சூடானதும் அதன் மீது தட்டில் அடுக்கப்பட்ட பிஸ்கட்களை வைத்து, மூடி வைக்கவும். 20 நிமிடங்கள் வேக வைத்தால், சுவையான சீரக பிஸ்கட் தயார்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வாயில் போட்டால் கரையும். காற்றுப்புகாத டப்பாக்களில் போட்டு வைத்தால், கெடாமல் இருக்கும். கடைகளில் வாங்கி சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வதை விட, வீட்டிலேயே அரை மணி நேரத்தில் சீரக பிஸ்கட் தயார் செய்யலாம்.
- நமது நிருபர் -

