UPDATED : நவ 15, 2025 08:11 AM
ADDED : நவ 15, 2025 08:01 AM

ஆம்லெட்டில் பல வகைகள் இருப்பினும், சில வகை ஆம்லெட்டுகளின் சுவை தாறுமாறாக இருக்கும். அவ்வகையில், இறால் ஆம்லெட்டின் சுவைக்கு ஈடு இணையே இல்லை என கூறலாம். இத்தனை சுவையான இறால் ஆம்லெட்டை எளிய முறையில் செய்வது எப்படி?
செய்முறை ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகு துாள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின், ஒரு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இதில், சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட வேண்டும். இதன் மீது மிளகு துாள், மஞ்சள் துாள், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உப்பு போட்டு நன்கு வதக்க வேண்டும்.
இறால் பாதியளவு வெந்ததும், அதன் மீது ஏற்கனவே கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றவும்.
இந்த முட்டை கலவை இறாலுடன் சேர்ந்து வெந்த பின், தோசையை திருப்பி போடுவது போல போட வேண்டும். அவ்வளவு தான் சுவையான இறால் ஆம்லெட் தயார்.
இந்த ஆம்லெட்டை, ரசம் சாதத்துக்கு தொட்டு சாப்பிடும்போது, சுவை அற்புதமாக இருக்கும். இந்த ஆம்லெட்டை அப்படியே சாப்பிட நினைத்தால், இதனுடன் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து சாப்பிடலாம்.
- நமது நிருபர் -

